Monday, April 27, 2009

இலண்டனில், பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம்: நீர் அருந்தாமல் தொடர்கின்றது


பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் 21 நாள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானியா அரசின் காதில் எட்டியபோதும் சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழ்இனப்படுகொலை தொடர்வதால் அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் 21 நாள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானியா அரசின் காதில் எட்டியபோதும் சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழ்இனப்படுகொலை தொடர்வதால் அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கும்வரை தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தை தண்ணீர் அருந்தாமல் தொடர்வதாக பரமேஸ்வரன் அறிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பல உறுதிமொழி கொடுத்தப்போதும் எதுவும் நிறைவேற்றப்படாதாலும் விடுதலைப்புலிகள் ஒரு தலைப்பட்சமாக போரை நிறுத்தியபோதும் சிறீலங்கா இராணுவம் மறுத்த பின்பும் உலக நாடுகள் மௌனம் சாதித்த காரணத்தாலும்தான் இந்த முடிவை எடுத்தாகவும் இந்த போராட்டம் தமிழீழத்திற்கு நிரந்தர சமாதானம் கிடைக்கும் வரை தொடரும் என மிகவும் உறுதியுடன் கூறினார்.இரவு 10 மணியளவில் இந்த செய்தியை அங்கு தங்கள்கவனயீர்ப்பு கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்த மக்களுக்கு தெரிவித்த போது ஏதும் செய்வதறியாமல் திகைத்து நின்ற மக்கள் பின்னர் தண்ணீர் அருந்தி அவருடைய உண்ணாநிலைப் போராட்டத்தை தொடரும்படி கெஞ்சி அழுதனர்.
இன்றோடு 20 நாள் ஆகியும் தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தை தொடரும் பரமேஸ்வரனை மிகவும் நீண்ட வரிசையில் பல மணித்தியாலங்கள் காத்திருந்து மக்கள் தரிசித்து செல்கின்றனர்.
இவரின் இந்த போராட்டத்தால் பல சிறுவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
நான்கு நாள் காத்திருப்பிற்கு பின் இன்றைய தினம் பரமேஸ்வரனை சந்தித்த 12 வயது சிறுமியொருவரின் தயார் அவருடைய மகளை பற்றி கருத்து தெரிவிக்கையில் தன்னுடைய மகள் பரமேஸ்வரின் புகைப்படங்களை தனது அறை சுவர்களில் ஒட்டியதோடு தொலைபேசி மூலம் மற்றவர்களுக்கு அனுப்பி கொண்டிருப்பதாக கூறினார்.
அந்த சிறுமி பரமேஸ்வரனுடன் சில நிமிடங்கள் உரையாடியதோடு தனக்கு நாளையும் அனுமதி வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.இன்றைய தினம் உலக பிரசித்தி பெற்ற இலண்டன் மரதன் நாடாளுமன்ற சதுக்கத்தை கடந்து சென்ற வேளை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்களுடைய கவனயீர்ப்பு போராட்டத்தை பதாதைகள், வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பல தமிழர் கலந்துகொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.இதில் ஒருவர் சிவப்பு மஞ்சள் வர்ணக் கொடியை கொண்டு ஓடியது பலரின் கவனத்தை ஈர்ந்துள்ளது.
தமிழீழ தாயகத்தின் விடிவை நோக்கிய தனது உண்ணாநிலைப் போராட்டத்தில் அனைத்து ஜரோப்பியா வாழ் தமிழ் மக்களையும் ஒன்றிணையும் படி பரமேஸ்வரன்தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment