Tuesday, April 28, 2009

கழிவறைக்குள் உட்கார்ந்து அழுதேன்-கட்டிப்பிடித்து அழக்கூட யாரும் துணைக்கு இல்லை:சீமான்


புதுச்சேரி சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனவுடன் இரவில் மாயாண்டி குடும்பத்தார் என்ற நடந்த இப்படத்தின் விழாவில் கலந்துகொண்டார் இயக்குநர் சீமான்.
விழாவில் சீமான், ”சிறை என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள். எனக்கும் பெரிய பயம் இருந்தது. ஆனால் உள்ளே போய் வந்த பிறகுதான் அந்த பயம் நீங்கியது.
சிறைக்குள் எந்த பயமும் கிடையாது. ரொம்ப நல்லவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். ரொம்ப கெட்டவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள்.
நான் 70 நாட்கள் தனிமை சிறைக்குள் இருந்தேன். உள்ளே அலைபேசியை பயன்படுத்தக்கூடாது. ஒரே ஒரு ரூபாய் நாணயம் போட்டு வெளியில் யாரிடமாவது பேசிக்கொள்ளலாம்.
அப்படி பேசும்போது இலங்கையில் நடப்பதையும் இங்கே நடப்பதையும் தெரிந்துகொண்டு கழிவறைக்குள் உட்கார்ந்து அழுதேன். கட்டிப்பிடித்து அழக்கூட யாரும் துணைக்கு இல்லை”என்று பேசினார்.

No comments:

Post a Comment