Thursday, April 23, 2009
போர் பகுதியில் இன்னும் 2 லட்சம் தமிழர்கள் உள்ளனர்; விடுதலைப்புலிகள் தகவல்
இலங்கை போர் பகுதியில் இருந்து கடந்த 4 நாட்களில் 1 லட்சம் தமிழர்கள் வெளியேறி இருப்பதாகவும், வேறு அப்பாவி தமிழர்கள் யாரும் இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர். விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு பிராந்திய அதிகாரி இளம்பரிதி இது பற்றி கூறியதாவது:- போர் பகுதியில் தங்கி இருக்கும் தமிழர்களை சிங்கள ராணுவம் பிடித்து செல்ல முயற்சித்ததும் அவர்களில் ஏராளமான தமிழர்கள் தப்பி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வளைஞர் மடம், முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் வந்துள்ளனர். எங்கள் பகுதிக்குள் இன்னும் 2 லட்சம் தமிழர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிலையில் போர் பகுதியில் இருக்கும் மக்களுக்கு போதிய உணவு இல்லை. நிலைமை மோசமாக இருக்கிறது என்று அங்குள்ள மருத்துவ குழு கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை போர் பகுதியில், சர்வதேச பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment