சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்து நடாத்தும் தமிழ் இன அழிப்பை கண்டித்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இன்று 19 நாளாக தங்களுடைய கவனயீர்ப்பு போராட்டத்தை நாடாளுமன்ற சதுக்கத்தில் முன்னெடுக்கின்றனர்.
18 ஆவது நாளாக தனது உண்ணாநிலைப் போராட்டத்தை தொடரும் பரமேஸ்வரன் அவர்களை பல வேற்றின மக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
அவர்களில் ஒருவர் தெரிவிக்கையில் “உங்களுடைய போராட்டம் நிறைவேறும் வரை என்னுடைய ஆதரவு தொடரும். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்” என்றார்.இப்படி ஆறுதல் ஒருவகையினர் சொல்ல மிதிவண்டியில் வேறொரு கவனயீர்ப்பு போராட்டத்தை நிகழ்த்திய வெளிநாட்டவர்கள் தமிழ் மக்களின் இந்த போராட்டத்தை ஆதரித்து அவர்கள் முன் சிறிய உரையாற்றியதோடு சிறீலங்கா அரசின் படுகொலைக் கண்டிக்கும் சில பாதாதைகளை தங்களுடைய மிதிவண்டியில் வைத்து சில துண்டுபிரசுரங்களை மக்களுக்கு பரப்புரை செய்வதற்காக எடுத்து சென்றுள்ளனர்,
பரமேஸ்வரன் அவர்களின் உண்ணாநிலை உன்னத தியாகமாக மதிக்கும் தமிழ் மக்கள் இன்றும் நீண்ட வரிசையில் நின்று அவரை தரிசித்துசென்றனர்.
இவரின் உண்ணாநிலையால் மிகவும் உணர்ச்சியடைந்துள்ள ஒரு தாய் வீட்டு வேலைகளை தள்ளி வைத்துவிட்டு பரமேஸ்வரன் அவர்களை தினமும் பார்வையிட்டு செல்கின்றார்.
அவர் இன்று பரமேஸ்வரனை சந்தித்து போது “நான் உங்களை ஒரு கடவுளாய் மதிக்கின்றேன். கடவுள் என்றே கையெடுத்து கும்பிடுகின்றேன். எனிமேல் கோயிலுக்குள் கால் எடுத்து வைக்க மாட்டேன்” என்று கூறினார்.
சிறீலங்காவில் காணால் போகும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என கோரி காணாமல் போவோற்கு எதிரென சர்வதேச செயற்குழு என்ற அமைப்பு நாளை(25.04.09) வுசயகயடபயச ளஙரயசந இல் 11 மணியிலிருந்து 12 மணிவரை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றனர். இதில் பல தமிழ் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:
Post a Comment