Friday, May 1, 2009

கடற்புலிகளும்,விடுதலைப்புலிகளும் இணைந்து படையினருக்கு பதிலடி


முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரையோரப் பகுதிக்குள் நுழைவதற்கான கடல் மற்றும் தரைமார்க்க நகர்வுகளை சிறிலங்கா படையினர் கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக மேற்கொண்டுவருகின்ற போதிலும் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படைநகர்வு தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளையில் இந்த முன்நகர்வைத் தடுத்துநிறுத்துவதற்காக விடுதலைப் புலிகள் ஏழு கரும்புலித் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதல்களில் படையினருக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பாக தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு படைத் தரப்பு விரும்பவில்லை எனத் தெரிகின்றது.
வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி ஊடாக பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் நேருக்கு நேர் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்திருக்கும் பாரிய மண் அணையைத் தாண்டிச் செல்லமுடியாத நிலையில் படையினர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் இடம்பெற்ற கடும் சமர் மற்றும் மண் அணையைத் தாண்டிச்செல்ல முடியாத நிலை என்பன காரணமாக படையினரின் முன்நகர்வு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
முள்ளிவாய்க்கால் கடற்கரைப் பகுதியில் ஒரு தரையிறக்கத்தை மேற்கொண்டு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி முன்நகரும் அதேவேளையில் வெள்ளமுள்ளிவாய்க்காலின் தென்பகுதியில் உள்ள வட்டுவாகல் பகுதியில் இருந்து உள்ளே நுழைவதற்கான பாரிய தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணி மேற்கொண்டுள்ளது.
இப்படையணிதான் விடுதலைப் புலிகளின் பாரிய மணல் அணையைத் தாண்டிச் செல்ல முடியாது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இதேவேளையில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணி அம்பலவன்பொக்கனையின் தென்பகுதியில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இப்படையணி 8 ஆவது சிறப்புப் படையணியின் கொமாண்டோக்களுடன் இணைந்து கரைய முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இப்பகுதியிலும் விடுதலைப் புலிகள் பாரிய மண் அணை ஒன்றை அமைத்திருப்பதுடன் கடுமையான எதிர்த் தாக்குதலையும் தொடுத்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது ஆறு கிலோ மீற்றர் நீளமான நிலப்பரப்பு மட்டுமே இருப்பதாக நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் மீது நேற்று முன்நாள் நான்கு தற்கொலைத் தாக்குதல்களைக் கரும்புலிகள் நடத்தியுள்ளனர்.
58 ஆவது படையணியினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான தாக்குதல்களை எதிர்பார்த்து படையினர் மேற்கொண்டிருந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கரையமுள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நேற்று முன்நாள் படையினர் பாரிய நகர்வு ஒன்றை மேற்கொண்ட போது கடும் சமர் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் விடுதலைப் புலிகள் பெருமளவு கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரட்டைவாய்க்காலின் தென்பகுதியில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள 58 ஆவது படையணி நேற்று தமது முன்நகர்வு நடவடிக்கையை மீண்டும் மேற்கொண்டனர்.
ஏப்ரல் 28 ஆம் நாளுக்குப்பின்னர் விடுதலைப் புலிகள் ஆறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு சந்தர்ப்பங்களில் அவர்கள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் வந்து அவற்றை வெடிக்கவைத்துள்ளனர்.
இருந்தபோதிலும் இத்தாக்குதல்களின் போது படையினருக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இராணுவத் தரப்பினரால் வெளியிடப்படவில்லை.
இதேவேளையில் முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் கடல்வழியாகத் தப்பிச் சென்றுவிடலாம் என்பதால் சிறிலங்கா கடற்படையினர் முல்லைத்தீவு கடற்பகுதியில் முழு அளவிலான விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவுக் கடற்பகுதியில் நான்கு பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு கடற்படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கும் அதேவேளையில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளையும் கடற்படையினர் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
இப்பகுதியில் கடற்படையினருடைய பெருமளவு கதுவீகள், டோரா படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கதுவீகள் மூலமாக கடல் மற்றும் தரைப் பகுதிகளின் நடமாட்டத்தை கடற்படையினர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும் வெளியே இருந்து அவர்களுக்கு உதவிகள் வருவதைத் தடுப்பதற்காகவுமே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ இணயத்தளமும் லங்காபுவத் இணையதளமும் புலிகளால் சிதைக்கப்பட்டுள்ளது : பிரிகேடியர் உதய நாணயக்கார


இராணுவ செய்திகளை வழங்கும் இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான army.lk மற்றும் லங்காபுவத் (Lankapuvath.lk) இணையதளங்கள் விடுதலைப்புலிகளால் இன்று ஹாக் (hack) பண்ணப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

Thursday, April 30, 2009

நள்ளிரவு முதல் சிறீலங்கா முப்படையினரும் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது அகோர தாக்குதல்கள் நடத்துகின்றனர்

சிறீலங்காப் படையினரின் முப்படைகளும் ”மக்கள் பாதுகாப்பு வலயம்” மீது மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக சற்று முன் வன்னியிலிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று நள்ளிரவு முதல் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தரைப்படையினர் எறிகணைகளை ஏவிவருகின்றனர். கடற்படையினர் கரையோரப் பிரதேசங்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதல்களை நடத்துகின்றனர். வான் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயத்தில் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.கடந்த ஒரு மணித்தியாலங்களாக (தாயக நேரம் நள்ளிரவு 12 மணி முதல்) சிறீலங்காப் படையினர் மிக மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக

பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது

பிரித்தானியாவில் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற மாணவனினால் 25-வது நாளாக முன்னெடுக்கப்பட்ட பட்டினிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மதியம் முடிவுக்கு வந்துள்ளது.

பிரிந்தானிய அரசாங்கம் வழங்கிய சில வெளியிடப்பட முடியாது உறுதி மொழிகளை அடுத்தே இவரது பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வருவதாக சுப்பிரமணியம் பரமேஸ்மரனினால் விடுக்கப்பட்ட ஊடகச் செவ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் ஊடங்களுக்கு ஐரோப்பிய நேரம் 13:20 மணிக்கு வழங்கிய ஊடகச் செவ்வியில்:
எங்களுக்கு சில நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் சில விடயங்களை கூறமுடியாது உள்ளது. எனினும் எமது மக்களுக்கு சில விடங்களை தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.
பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதன் ஊடாக எமக்கு கிடைத்த சில சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போகின்றன. அந்த வகையில் இரண்டு மூன்று முக்கிய சந்தப்பங்கள் இப்போது கிடைத்துள்ளன.
பட்டினிப் போராட்டத்தை கைவிடுவதன் ஊடாகவே இச் சந்தப்பங்களைப் பயன்படுத்தலாம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள சில நிர்பந்தங்களால் அவற்றை வெளிப்டையாகக் கூறமுடியாது உள்ளது.
எனினும் எமது மக்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். பிரித்தானியாவில் இரண்டு அல்லது மூன்று உயர் முக்கிய சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுவும் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே இச்சந்திப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என உத்தவாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தாது போனால் தீர்வுகளும் கிடைக்காமல் போய்விடும். எமக்கான தீர்வினை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சில காலம் பொறுத்திருக்க வேண்டும். சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
இன்னும் சிறுதி காலத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் தெரியப்படுத்துவோம். அது எமது தலையாய கடமை என்பதைக் கூறி எனது பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்கின்றேன் என பரமேஸ்வரன் ஊடகச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பிரிந்தானிய மருத்துவக்குழு ஒன்று பரமேஸ்வரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றது. அத்துடன் பிரித்தானிய பாராளுமன்றக் கட்டிடத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மாணவர் பிரித்தானிய சமூதாயம் அறிவித்துள்ளது.

அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை – புலிகள் மீண்டும் வலியுறுத்து :

அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்ச் சிவிலியன்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் எவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கினாலும் தமிழீழ போராட்டம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தை யுத்தம் நிறுத்தமொன்றுக்கு செல்லுமாறு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அசோசியேடட் பிரஸ் ஊடகத்திற்கு அளித்த மின்னஞ்சல் செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, April 28, 2009

பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்


கடந்த 21 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இருதயம் துடிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது.பரமேஸ்வரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் பிரித்தானியாவில் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாணவ சமூகம் தற்போது அவர் உண்ணாவிரதமிருக்கும் திடலில் குவிய ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரனின் இதயம் துடிப்பது குறைய ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அவரின் மன உறுதியும் இ பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வும் இன்னமும் குறையவில்லை. 21 நாட்களாக ஆகாரமின்றி தன்னை வருத்தி ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இவர் ஏற்றிய தீபம் தற்போது பிரித்தானிய தமிழரிடையே கொளுந்துவிட்டு எரிகின்ற நெருப்பாக மாறியுள்ளது. கடந்த 2 தினங்களாக நீர் அருந்துவதை கூட தவிர்த்துவிட்ட பரமேஸ்வரனின் நிலை இன்று மதியம் கவலையளிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இனியும் நாம் பொறுத்திருந்து என்ன செய்யப்பொகிறோம். ?? புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...

இடம்பெயர்ந்த மக்கள் மீது தொடரும் கனரக ஆயுதங்களின் தாக்குதல்கள்




சிறீலங்காப் படையினரின் முப்படையினரும் ”மக்கள் பாதுகாப்பு வலயம்” மீது தொடர்ச்சியாக அகோர தாக்குதல்களை நடத்திவருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வதிவிடங்களை இலக்கு வைத்து பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், ஆர்.பி.ஜி உந்துகணைகள், டாங்கித் தாக்குதல்கள் மற்றும் நெடுந்தூர துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருகின்றனர்
இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பு பதுங்குழிகளில் பாதுகாப்பைத் தேடிக்கொண்டதால் நேற்று திங்கட்கிழமை எதிர்பார்த்த இழப்புகளை விட உயிரிழப்புகள் குறைவாகவே இருந்துள்ளது.