ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கையின் யுத்த சூன்ய பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.யுத்த சூன்ய பிரதேசத்தில் உள்ள பொதுமக்களின் நிலைமைகள் குறித்து இந்தக் குழுவினர் ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை விடுத்த வேண்டுகோளை சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
யுத்த சூன்ய பிரதேச மக்களது நிலைமைகளை நேரில் பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரசல்ஸில் நடைபெற்ற சோமாலியாவிற்கு உதவி வழங்கும் நாடுகளினது மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை விஜயத்திற்கு இலங்கை அரசாங்கம் பூரண ஆதரவு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment