சிறீலங்காப் படையினரின் முப்படைகளும் ”மக்கள் பாதுகாப்பு வலயம்” மீது மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக சற்று முன் வன்னியிலிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று நள்ளிரவு முதல் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தரைப்படையினர் எறிகணைகளை ஏவிவருகின்றனர். கடற்படையினர் கரையோரப் பிரதேசங்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதல்களை நடத்துகின்றனர். வான் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயத்தில் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.கடந்த ஒரு மணித்தியாலங்களாக (தாயக நேரம் நள்ளிரவு 12 மணி முதல்) சிறீலங்காப் படையினர் மிக மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக
Thursday, April 30, 2009
பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது
பிரித்தானியாவில் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற மாணவனினால் 25-வது நாளாக முன்னெடுக்கப்பட்ட பட்டினிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மதியம் முடிவுக்கு வந்துள்ளது.
பிரிந்தானிய அரசாங்கம் வழங்கிய சில வெளியிடப்பட முடியாது உறுதி மொழிகளை அடுத்தே இவரது பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வருவதாக சுப்பிரமணியம் பரமேஸ்மரனினால் விடுக்கப்பட்ட ஊடகச் செவ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் ஊடங்களுக்கு ஐரோப்பிய நேரம் 13:20 மணிக்கு வழங்கிய ஊடகச் செவ்வியில்:
எங்களுக்கு சில நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் சில விடயங்களை கூறமுடியாது உள்ளது. எனினும் எமது மக்களுக்கு சில விடங்களை தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.
பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதன் ஊடாக எமக்கு கிடைத்த சில சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போகின்றன. அந்த வகையில் இரண்டு மூன்று முக்கிய சந்தப்பங்கள் இப்போது கிடைத்துள்ளன.
பட்டினிப் போராட்டத்தை கைவிடுவதன் ஊடாகவே இச் சந்தப்பங்களைப் பயன்படுத்தலாம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள சில நிர்பந்தங்களால் அவற்றை வெளிப்டையாகக் கூறமுடியாது உள்ளது.
எனினும் எமது மக்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். பிரித்தானியாவில் இரண்டு அல்லது மூன்று உயர் முக்கிய சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுவும் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே இச்சந்திப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என உத்தவாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தாது போனால் தீர்வுகளும் கிடைக்காமல் போய்விடும். எமக்கான தீர்வினை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சில காலம் பொறுத்திருக்க வேண்டும். சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
இன்னும் சிறுதி காலத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் தெரியப்படுத்துவோம். அது எமது தலையாய கடமை என்பதைக் கூறி எனது பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்கின்றேன் என பரமேஸ்வரன் ஊடகச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பிரிந்தானிய மருத்துவக்குழு ஒன்று பரமேஸ்வரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றது. அத்துடன் பிரித்தானிய பாராளுமன்றக் கட்டிடத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மாணவர் பிரித்தானிய சமூதாயம் அறிவித்துள்ளது.

அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை – புலிகள் மீண்டும் வலியுறுத்து :
அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்ச் சிவிலியன்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் எவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கினாலும் தமிழீழ போராட்டம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தை யுத்தம் நிறுத்தமொன்றுக்கு செல்லுமாறு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அசோசியேடட் பிரஸ் ஊடகத்திற்கு அளித்த மின்னஞ்சல் செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, April 28, 2009
பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

கடந்த 21 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இருதயம் துடிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது.பரமேஸ்வரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் பிரித்தானியாவில் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாணவ சமூகம் தற்போது அவர் உண்ணாவிரதமிருக்கும் திடலில் குவிய ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரனின் இதயம் துடிப்பது குறைய ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அவரின் மன உறுதியும் இ பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வும் இன்னமும் குறையவில்லை. 21 நாட்களாக ஆகாரமின்றி தன்னை வருத்தி ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இவர் ஏற்றிய தீபம் தற்போது பிரித்தானிய தமிழரிடையே கொளுந்துவிட்டு எரிகின்ற நெருப்பாக மாறியுள்ளது. கடந்த 2 தினங்களாக நீர் அருந்துவதை கூட தவிர்த்துவிட்ட பரமேஸ்வரனின் நிலை இன்று மதியம் கவலையளிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இனியும் நாம் பொறுத்திருந்து என்ன செய்யப்பொகிறோம். ?? புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...
இடம்பெயர்ந்த மக்கள் மீது தொடரும் கனரக ஆயுதங்களின் தாக்குதல்கள்

சிறீலங்காப் படையினரின் முப்படையினரும் ”மக்கள் பாதுகாப்பு வலயம்” மீது தொடர்ச்சியாக அகோர தாக்குதல்களை நடத்திவருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வதிவிடங்களை இலக்கு வைத்து பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், ஆர்.பி.ஜி உந்துகணைகள், டாங்கித் தாக்குதல்கள் மற்றும் நெடுந்தூர துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருகின்றனர்
இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பு பதுங்குழிகளில் பாதுகாப்பைத் தேடிக்கொண்டதால் நேற்று திங்கட்கிழமை எதிர்பார்த்த இழப்புகளை விட உயிரிழப்புகள் குறைவாகவே இருந்துள்ளது. நேற்றிரவு சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வதிவிடங்களை இலக்கு வைத்து பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், ஆர்.பி.ஜி உந்துகணைகள், டாங்கித் தாக்குதல்கள் மற்றும் நெடுந்தூர துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருகின்றனர்
சுவீடன் அமைச்சருக்கு வீஸா அனுமதி மறுத்ததன் மூலம் இலங்கை பாரிய விளைவுகளை எதிர்நோக்கும் செக் குடியரசு:
சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு வீஸா அனுமதி மறுத்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறைத் தலைமைத்துவத்தை வகிக்கும் செக் குடியரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்று வரும் யுத்தம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிச் சிவிலியன்களது நிலைமையை நேரில் கண்டறியும் நோக்கில் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
எனினும், இறுதி நேரத்தில் சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கைக்குச் செல்வதற்கான வீஸா அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவீடன் அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை கண்டனத்திற்குரிய குற்றமாகும் என செக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் கரல் சிச்வான்ஸர்பெர்க் Karel Schwarzenberg தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கை பாரிய பின் விளைவுகளை எதிர்நோக்க நேரிடலம் என அவர் தெரிவித்துள்ளார்.
முறுகல்களுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதில் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் விற்பன்னராக திகழ்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை விவகாரம் ஒபாமா அவசர ஆலோசனை

இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை மூத்த அதிகாரிகளுடன் அதிபர் பாரக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளார். இலங்கைப் பிரச்சினையில் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்தியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் காரணமாக, பல்வேறு வல்லரசு நாடுகளும் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபப் பார்வையைத் திருப்பியுள்ளன.இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு முக்கிய நடவடிக்கையாக, அரசின் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.மிக முக்கியப் பிரச்சினைகளில் மட்டுமே இவ்வாறு பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து அதிபர் ஆலோசனை மேற்கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆலோசனையில் அமெரிக்க வெளியுறவுத்துறை, பென்டகன், தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ்எய்ட், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக் காட்டுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது.அதிபர் ஒபாமாவுக்கு இலங்கை நிலவரம் குறித்து தினசரி தெரிவிக்கப்பட்டு வருகிறதாம். இலங்கை நிலவரத்தை அதிபர் ஒபாமா கூர்ந்து கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன
கழிவறைக்குள் உட்கார்ந்து அழுதேன்-கட்டிப்பிடித்து அழக்கூட யாரும் துணைக்கு இல்லை:சீமான்

புதுச்சேரி சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனவுடன் இரவில் மாயாண்டி குடும்பத்தார் என்ற நடந்த இப்படத்தின் விழாவில் கலந்துகொண்டார் இயக்குநர் சீமான்.
விழாவில் சீமான், ”சிறை என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள். எனக்கும் பெரிய பயம் இருந்தது. ஆனால் உள்ளே போய் வந்த பிறகுதான் அந்த பயம் நீங்கியது.
சிறைக்குள் எந்த பயமும் கிடையாது. ரொம்ப நல்லவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். ரொம்ப கெட்டவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள்.
நான் 70 நாட்கள் தனிமை சிறைக்குள் இருந்தேன். உள்ளே அலைபேசியை பயன்படுத்தக்கூடாது. ஒரே ஒரு ரூபாய் நாணயம் போட்டு வெளியில் யாரிடமாவது பேசிக்கொள்ளலாம்.
அப்படி பேசும்போது இலங்கையில் நடப்பதையும் இங்கே நடப்பதையும் தெரிந்துகொண்டு கழிவறைக்குள் உட்கார்ந்து அழுதேன். கட்டிப்பிடித்து அழக்கூட யாரும் துணைக்கு இல்லை”என்று பேசினார்.

Monday, April 27, 2009
முப்படைகளும் இணைந்து நடத்திய கொடூரத் தாக்குதல்: இன்று மட்டும் 272 பேர் படுகொலை
முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘பாதுகாப்பு வலயம்’ எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து இன்று பல முனைகளில் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:45 நிமிடமளவில் புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது சிறிலங்காவின் இராணுவத்தினரும், கடற்படையினரும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு முன்நகர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்ட அதேவேளையில் வான்படையின் வானூர்திகள் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்தின.
செறிவான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியவாறே முன்நகர்வு முயற்சியை படையினர் மேற்கொண்டனர்.
பொதுமக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்து சிறிலங்கா படையினரின் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 8:30 நிமிடம் வரையிலான காலப்பகுதியில் மட்டும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் எட்டுத் தடவை இப்பகுதிக்கு வந்து கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களை மக்கள் பெருமளவுக்கு செறிவாக வசிக்கும் பகுதிகளை நோக்கி நடத்திச் சென்றுள்ளன.
இதன் பின்னரும் வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுளன்ளன.
இந்தத் தாக்குதல்களில் 272 பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில் பெரும் தொகையானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள குடியிருப்புக்களை நோக்கி இன்று காலை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் சாளம்பன் என்ற இடத்தில் மட்டும் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி சிறிலங்கா கடற்படை கப்பல்களில் இருந்து நடத்தப்பட்ட செறிவான எறிகணைத் தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 172 பேர் காயமடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெறித்தனமான தாக்குதல்களை சிறிலங்காவின் முப்படைகளும் தொடர்ந்தும் பாதுகாப்பு வலயத்தின் மீது நடத்திவருகின்றனர்.
இதேவேளையில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களையும் வான் தாக்குதல்களையும் நடத்தப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் இன்று பிற்பகல் அறிவித்த பின்னரும் அவ்வாறான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் குற்றம்சாட்டியிருக்கின்றார்.
வான் தாக்குதல்கள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று பிற்பகல் 12:50 நிமிடமளவிலும் பின்னர் 1:10 நிமிடமளவிலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“அனைத்துலக சமூகத்தை குறிப்பாக தமிழ்நாட்டை ஏமாற்றும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் நடந்துகொள்கின்றது” எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
வலைஞர்மடம் பகுதியை நோக்கிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் பொதுமக்களின் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன்; அது அவர்களின் அன்னை பூமி!: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்

இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய இராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார்.என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.
இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய இராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய இராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது.
வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை இராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை.
இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை இராணுவம் இந்திய இராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை இராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய இராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.
இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்ச.
இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?.
இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.
வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே!
எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.
தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.
இன்று அதிகாலை 4:00 மணியில் இருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 6:00 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கொடூரத் தாக்குதலை இந்த உண்ணாவிரத நாடகம் உலகின் பார்வையில் இருந்து மறைத்துவிட முடியாது.
மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது. மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவின் இராணுவச் செயலாளர் கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.
இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கோத்தப்பாய ராஜபக்ச கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது.
இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னதைப் பற்றி காங்கிரஸ் மத்திய மந்திரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில்சிபில், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார்.
கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே!
இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது. கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.
கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம்.
இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் அவர்.

இலண்டனில், பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம்: நீர் அருந்தாமல் தொடர்கின்றது
பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் 21 நாள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானியா அரசின் காதில் எட்டியபோதும் சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழ்இனப்படுகொலை தொடர்வதால் அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் 21 நாள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானியா அரசின் காதில் எட்டியபோதும் சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழ்இனப்படுகொலை தொடர்வதால் அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கும்வரை தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தை தண்ணீர் அருந்தாமல் தொடர்வதாக பரமேஸ்வரன் அறிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பல உறுதிமொழி கொடுத்தப்போதும் எதுவும் நிறைவேற்றப்படாதாலும் விடுதலைப்புலிகள் ஒரு தலைப்பட்சமாக போரை நிறுத்தியபோதும் சிறீலங்கா இராணுவம் மறுத்த பின்பும் உலக நாடுகள் மௌனம் சாதித்த காரணத்தாலும்தான் இந்த முடிவை எடுத்தாகவும் இந்த போராட்டம் தமிழீழத்திற்கு நிரந்தர சமாதானம் கிடைக்கும் வரை தொடரும் என மிகவும் உறுதியுடன் கூறினார்.இரவு 10 மணியளவில் இந்த செய்தியை அங்கு தங்கள்கவனயீர்ப்பு கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்த மக்களுக்கு தெரிவித்த போது ஏதும் செய்வதறியாமல் திகைத்து நின்ற மக்கள் பின்னர் தண்ணீர் அருந்தி அவருடைய உண்ணாநிலைப் போராட்டத்தை தொடரும்படி கெஞ்சி அழுதனர்.
இன்றோடு 20 நாள் ஆகியும் தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தை தொடரும் பரமேஸ்வரனை மிகவும் நீண்ட வரிசையில் பல மணித்தியாலங்கள் காத்திருந்து மக்கள் தரிசித்து செல்கின்றனர்.
இவரின் இந்த போராட்டத்தால் பல சிறுவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
நான்கு நாள் காத்திருப்பிற்கு பின் இன்றைய தினம் பரமேஸ்வரனை சந்தித்த 12 வயது சிறுமியொருவரின் தயார் அவருடைய மகளை பற்றி கருத்து தெரிவிக்கையில் தன்னுடைய மகள் பரமேஸ்வரின் புகைப்படங்களை தனது அறை சுவர்களில் ஒட்டியதோடு தொலைபேசி மூலம் மற்றவர்களுக்கு அனுப்பி கொண்டிருப்பதாக கூறினார்.
அந்த சிறுமி பரமேஸ்வரனுடன் சில நிமிடங்கள் உரையாடியதோடு தனக்கு நாளையும் அனுமதி வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.இன்றைய தினம் உலக பிரசித்தி பெற்ற இலண்டன் மரதன் நாடாளுமன்ற சதுக்கத்தை கடந்து சென்ற வேளை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்களுடைய கவனயீர்ப்பு போராட்டத்தை பதாதைகள், வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பல தமிழர் கலந்துகொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.இதில் ஒருவர் சிவப்பு மஞ்சள் வர்ணக் கொடியை கொண்டு ஓடியது பலரின் கவனத்தை ஈர்ந்துள்ளது.
தமிழீழ தாயகத்தின் விடிவை நோக்கிய தனது உண்ணாநிலைப் போராட்டத்தில் அனைத்து ஜரோப்பியா வாழ் தமிழ் மக்களையும் ஒன்றிணையும் படி பரமேஸ்வரன்தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறி லங்கா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயாராகிவருகின்றது!

வன்னியில் தமிழ்மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் சொந்த வாழ்விடயங்களில் இருந்து இடம்பெயர்வது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் ரொபேட் வூட் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், யுத்த சூனிய வலையத்தினுள் குண்டுத்தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.
இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதால் பொதுமக்களின் அவலங்களும் அதிகரித்து செல்வதாக நம்பகமான தகவல்கள் எமக்கு நாளாந்தம் கிடைத்துவருகின்றன.
சிறிலங்கா அரசாங்கத்தை யுத்த சூனியப்பிரதேசத்தினுள் மக்களின் நலன்கருதி குண்டுத்தாக்கதல்களை மேற்கொள்ளவேண்டாம் என திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிக்கின்றோம்.
அதேவேளை பொதுமக்களை யுத்தசூனியப்பிரதேசத்தில் இருந்து வெளியேற தமிழீழ விடுதலைப் புலிகள் தடைகள் எதையும் விதிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஐ.நா.முகவர்களை அனுமதிக்கவேண்டும் என்ற ஐ.நா.செயலாளரின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் வலியுறுத்துகின்றது. அதை நாம் பலமாக ஆதரிக்கின்றோம்.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா நிலவரம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார்.
வேறு பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்திக்கும்போதெல்லாம் இந்த விடயம்குறித்து விவாதித்துள்ளார்.
அவர் இந்த விடயம் குறித்து யார் யார் உடன் எல்லாம் விவாதித்துள்ளார் என்பது குறித்து என்னால் எந்த தகவல்களையும் வழங்கமுடியாது.
அவர் சிறிலங்கா தமிழ் மக்கள் விடயத்தில் மிகவும் அக்கறை கொண்டவராக இருக்கின்றார்.சிறிலங்கா பிரச்சினைகள் குறிதது நாம் தொடர்ந்தும் நெருக்குதல்களை கொடுத்துவருகின்றோம்.
நாம் செயற்பட்டே அகவேண்டிய மிகவும் முக்கியமான வெளிநாட்டுக்கொள்கை இது. நாம் தொடர்வோம்.
சிறிலங்கா அரசின் மீது கடினமான ஒரு நிலைபாட்டை அமெரிக்கா எடுக்கவுள்ளது என்பதை இந்த கருததுக்கள் கோடிட்டு காட்டுகின்றது.
கடந்தாரம் அமெரிக்க வெளியுறவு தொடர்பான குழுவின் முன் கருத்து வெளியட்டபோது, அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிக் குறிப்பட்டபோது அவர்களை கிளாச்சியாளர்கள், என்ற பதத்திலேயே குறிப்பிட்டுள்ளார். மாறாக பயங்கரவாதிகள் என்று குறிப்பிடவில்லை.
இதிலிருந்து ஒபாமாவுடைய நிர்வாகம் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான கொள்கையினை புஸ் நிர்வாகத்தைப்போலன்றி அணுகுமுறையினை மாற்றிக்கொள்ள உத்தேசித்திருப்பதும் இதிலிருந்து தெரியவருகின்றது.
இதுகுறித்து நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா அரசாங்கத்தின் எறிகணை வீச்சுக்களை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டது.
உதவி வழங்கும் அமைப்புக்கள் அங்கு சென்று மக்களுக்கு உதவுவதை சிறி லங்கா அரசாங்கம் தடுக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டது.
இதற்கு முந்திய தினம் வழக்கத்திற்கு மாறான ஒரு நடவடிக்கையில் முல்லைத்தீவு பிரதேசத்தின் செய்மதி நிழற்படத்தினை அமெரிக்கா மிகத் தெளிவாக காட்டக்கூடியவாறு வெளியிட்டுள்ளது.
சர்வதேச நிறுவனங்களையும், ஊடகங்களையும் அப்பிரதேசங்களுக்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுத்தாலும், அங்கே என்ன நடக்கின்றது என்பதை அமெரிக்காவால் கூறமுடியும் என்பதை சிறிலங்கா அரசாங்கத்திற்கு உணர்த்தவே இவ்வாறு இந்த செய்மதிப்படங்கள் அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ளது எனக் கருதமுடியும்.
பொது மக்களின் வாழ் விடங்களைக் காடடுவதாக மிகத் தெளிவாக, மிக நெருக்கமான படங்கள் உள்ளன.

முன்னேறும் இராணுவத்தை எதிர்த்து புலிகள் கடும் தாக்குதல் தரையிறங்க முயற்சித்த படகுகள் தாக்கியழிப்பு
மீதமுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் இன்று அதிகாலை 3.45 மணியளவில் பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
வான், கடற்படை மற்றும் தரைப்படை என்பனவற்றை தாக்குதலில் பயன்படுத்தி, கனரக ஆயுதங்களையும் முன் நகர்த்தி பாரிய அழிவினை ஏற்படுத்த இலங்கை அரசு முனைகிறது.
கடும் முறியடிப்புச் சமரில் விடுத்லைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் ஊடாக இராணுவத்தினரை தரையிறக்கி தாக்குதலை நடத்த இராணுவம் திட்டமிட்டிருந்ததாகவும். பல படகுகளில் இராணுவத்தினர் தரையிறக்கத்துக்காக காத்திருந்த வேளை புலிகளின் RPG தாக்குதல் பிரிவு நடத்திய தாக்குதலில் பல படகுகள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது.
வட்டுவாகல் பகுதியில் புலிகள் அமைத்திருக்கும் பாரிய மண் அணையை உடைத்து பாதுகாப்பு வலயத்துக்குள் உள் நுளைய இராணுவம் கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் அங்கு நிலை எடுத்திருக்கும் புலிகள் கடும் தாக்குதலை தொடுத்திருப்பதுடன், புலிகளின் குறிசூட்டனியும் தொலைதூரத்தில் இருந்து தாக்குதல் நடத்துவதால் இராணுவத்தால் முன்னேறமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர் இந்த தாக்குதலை நெறிப்படுத்துவதால் இராணுவம் பல இழப்புக்களை சந்திக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் , தற்போது வான் தாக்குதல்கல் அதிகரிக்கப்பட்டு கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதலும் நடத்தப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Saturday, April 25, 2009
பிரித்தானியாவில் தொடரும் பட்டினிப் போரில் பரமேஸ்வரனின் 18 ஆவது நாள்

சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்து நடாத்தும் தமிழ் இன அழிப்பை கண்டித்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இன்று 19 நாளாக தங்களுடைய கவனயீர்ப்பு போராட்டத்தை நாடாளுமன்ற சதுக்கத்தில் முன்னெடுக்கின்றனர்.
18 ஆவது நாளாக தனது உண்ணாநிலைப் போராட்டத்தை தொடரும் பரமேஸ்வரன் அவர்களை பல வேற்றின மக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
அவர்களில் ஒருவர் தெரிவிக்கையில் “உங்களுடைய போராட்டம் நிறைவேறும் வரை என்னுடைய ஆதரவு தொடரும். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்” என்றார்.இப்படி ஆறுதல் ஒருவகையினர் சொல்ல மிதிவண்டியில் வேறொரு கவனயீர்ப்பு போராட்டத்தை நிகழ்த்திய வெளிநாட்டவர்கள் தமிழ் மக்களின் இந்த போராட்டத்தை ஆதரித்து அவர்கள் முன் சிறிய உரையாற்றியதோடு சிறீலங்கா அரசின் படுகொலைக் கண்டிக்கும் சில பாதாதைகளை தங்களுடைய மிதிவண்டியில் வைத்து சில துண்டுபிரசுரங்களை மக்களுக்கு பரப்புரை செய்வதற்காக எடுத்து சென்றுள்ளனர்,
பரமேஸ்வரன் அவர்களின் உண்ணாநிலை உன்னத தியாகமாக மதிக்கும் தமிழ் மக்கள் இன்றும் நீண்ட வரிசையில் நின்று அவரை தரிசித்துசென்றனர்.
இவரின் உண்ணாநிலையால் மிகவும் உணர்ச்சியடைந்துள்ள ஒரு தாய் வீட்டு வேலைகளை தள்ளி வைத்துவிட்டு பரமேஸ்வரன் அவர்களை தினமும் பார்வையிட்டு செல்கின்றார்.
அவர் இன்று பரமேஸ்வரனை சந்தித்து போது “நான் உங்களை ஒரு கடவுளாய் மதிக்கின்றேன். கடவுள் என்றே கையெடுத்து கும்பிடுகின்றேன். எனிமேல் கோயிலுக்குள் கால் எடுத்து வைக்க மாட்டேன்” என்று கூறினார்.
சிறீலங்காவில் காணால் போகும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என கோரி காணாமல் போவோற்கு எதிரென சர்வதேச செயற்குழு என்ற அமைப்பு நாளை(25.04.09) வுசயகயடபயச ளஙரயசந இல் 11 மணியிலிருந்து 12 மணிவரை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றனர். இதில் பல தமிழ் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிவிலியன்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ‐ இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு

சிவிலியன்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ‐ அமெரிக்கா: வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகளின் போது சிவிலியன்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், இவ்வாறான இழப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்கள் வெளியேறுவதற்கு உகந்த வகையில் இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது. யுத்தம் காரணமாக பாரிய பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள அப்பாவிச் சிவலியன்கள் தொடர்பில் வொஷிங்டன் அதிக கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக அப்பாவிச் சிவிலியன்களது உயிர்கள் காவுகொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் உடனடியாக யுத்தத்தை கைவிட்டு சிவிலியன் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென ஒபாமா அரசாங்கம் கோரியுள்ளது. அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, பிரித்தானியா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்த வாரம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மோதல் தவிர்ப்பு வலயத்தின் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் ஊடகவயிலாளர்கள் மோதல் தவிர்ப்பு வலயத்திற்கு செல்ல அனுமதியளிக்கப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் ‐ அமெரிக்கா
இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த இந்தியா அரசாங்கம் மேற்கொண்டு முனைப்புக்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபர்ட் வூட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கிய உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கி அல்லலுறும் அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பே மிகவும் முதன்மையானதென அமெரிக்கா அறிவித்துள்ளது. பல்லாயிரக் கணக்கான சிவிலியன்கள் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ள போதிலும், பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர் ஓ பிளெக் ஆகியோர் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளுடன் இலங்கை நிலவரம் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இணைத் தலைமை நாடுகள், ஜீ‐8 நாடுகள் ஆகியன இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பாவிச் சிவிலியன்களை மனித கேடயமாக தமிழீழ விடுதலைப் பயன்படுத்தக் கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதங்களை களைந்து மூன்றாம் தரப்பினரிடம் புலிகள் சரணடைய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அகதி முகாம்களில் தங்கியுள்ள சிவிலியன்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் – UNHCR :
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான சிவிலியன்கள் வரையறுக்கப்பட்ட இடத்தில் தங்க வைக்பப்பட்டுள்ளதனால் சிக்கல்கள் உருவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவிலியன்கள் இடப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், கடும் வெய்யில் காலநிலையிலும் அதிக சிவிலியன்கள் கூடாரங்கள் இன்றி அல்லலுறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தரும் சிவிலியன்கள் தங்குவதற்கு போதியளவு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. உணவு, சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அப்பாவிச் சிவிலியன்களுக்கு உதவியளிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனம் பெருந்தொகை கூடாரங்களை விமானம் மூலம் அவசரமாக தருவிக்கத் திட்டமிட்டுள்ளது. அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் குறைபோசாக்கு நிலையில் காணப்படுவதாக தொண்டு நிறுவன பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மருத்துவ பணியாளர்கள் மற்றும் காயமடைந்த, நோய்வாய்ப்பட்டோரை சிகிச்சைகளுக்கான அழைத்து செல்வதற்கு போதியளவு போக்குவரத்து வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவிலியன்கள் படுகொலைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வன்மையாகக் கண்டனம் :

வன்னியில் அப்பாவிச் சிவிலியன்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை வன்யைமாகக் கண்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.மோதல்களில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் சிவிலியன் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இன்றியமையாததென ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சகல சந்தர்ப்பங்களிலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களது நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது. அப்பாவிச் சிவிலியன்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்தக் கூடாத எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Friday, April 24, 2009
உண்மையின் தரிசனம்
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த இந்த உலகம், ஆயுதம் ஏந்தி போராடியதும் எங்களை திவிரவாதி என்றது இந்த உலகம்... எத்தனை உறவுகள் நாளுக்கு நாள் செத்து மடிகிறார்கள் படு காயத்திற்குள்ளாகிறார்கள் இருந்தும் சர்வதேசம் வேடிக்கை பார்த்து தங்களுடைய சுய நன்மைக்காக எங்களுடைய மக்களின் அவலங்களை வேடிக்கையாக்கி விமர்சிக்கிறது. இப்படியான பேரவலம் ஏற்படும்போது ஜனநாயக நாடாக யார் தங்களை முத்திரை குத்துகிறார்களோ அவர்களெல்லாம் முன்வரவேண்டும் மக்களின் அவலங்களை போக்கவேண்டும். ஆனால் இதற்கு மாறாக இந்தப் பேரவலத்தை அரசியல் ஆக்கி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது. ஜனநாயக நாடாக முத்திரை குத்திய பல நாடுகள் விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று தங்களுடைய பட்டியலில் சேர்த்துக் கொண்டது ஏன் இந்த கொடுமை எங்கள் தமிழ் இனத்துக்கு...இனியாவது தமிழர் நாம் ஒன்றிணைந்து ஈழத்தை பெறுவோம் என்று உறுதி கொள்வோமா ??? விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு அல்ல.அது தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் விடுதலை இயக்கம்.தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம்.இலங்கை தமிழர்களின் உரிமைக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் போராடி வருகிறது. தமிழ் ஈழம் அமைவதை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது. புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் பல தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். புதிய தளபதிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாறுகளில் சாதாரண விடயம். ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது விடுதலைப்புலிகளை அழிப்பதாக தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. புலிகளை யாராலும் அழிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்வு பூர்வமாக ஒன்றுபட வேண்டும். உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் ஆசை தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பது தான்.
ஈழ ஆர்ப்பாட்டம்:சிறிது நேரம் மட்டும் சீமான் பங்கேற்பு
ஈழத்தமிழர்களுக்காக பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
பாரதிராஜா தலைமையில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்திற்கு நடிகர் சத்யராஜ், நடிகர் பார்த்திபன், இயக்குநர் பாலுமகேந்திரா, இயக்குநர் அமீர், இயக்குநர் மணிவண்ணன், ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா, வெற்றி மாறன், ஹரி, பிரவீன்காந்த், சுசிகணேசன், சசி, சமுத்திரகணி நடிகர்கள் கஞ்சா கருப்பு மற்றும் தாமரை, ரோகினி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
சின்னத்திரை கலைஞர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
டைரக்டர் சீமான் இப்போராட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு சென்று விட்டார். மேலும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று மாலை 5மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் முடிவடைகிறது.
போராட்ட முடிவில் ஈழப்பிரச்சனை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன

சுடரொளி பத்திரிகை பிரதம ஆசிரியர் வித்தியாதரன் நீதிமன்றினால் விடுதலை

கொழும்பிலிருந்து தினசரி வெளியிடப்படுகின்ற சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் கொழும்பு நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கொழும்பில் கடைசியாக இடம்பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் தொடர்பில் வித்தியாதரன் 26-2-2009 அன்று குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று கொழும்பு நீதிமன்றில் ஆஜர் படுத்தியிருந்த போது, இவர் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டு நிருபிக்கப்படாத நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தி பொதுமக்களை வெளியேற்றிய படையினரால் உணவுகளை கொடுக்க வழியில்லை
பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்திய இலங்கைப்படயினருக்கு அவர்களுக்கு உரிய உணவுகளை வழங்கமுடியில்லை என வவுனியா செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அரசாங்கம் பொதுமக்களிடம் இருந்து இடம்பெயர்ந்தோருக்கான உணவுப்பொருட்களை சேகரித்து வருகிறது
இந்தநிலையில் கடந்த செவ்வாய்கிழமை முதல் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேறிய மக்கள் எப்போது வவுனியா தடுப்பு முகாம்களுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்ற தகவலை வவுனியா செயலகத்தரப்புகள் உறுதிப்படுத்தவில்லை
இந்தநிலையில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக கொழும்பில் தெரிவிக்கப்படுகின்ற போதும் யாழ்ப்பாணத்திற்கு ஐயாயிரத்து 147 பேர் மாத்திரமே வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்கள் மீன்பிடிப்படகுகளின் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.

ஐ.நாவின் விசேட பிரதிநிதிகள் யுத்த சூன்ய பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கையின் யுத்த சூன்ய பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.யுத்த சூன்ய பிரதேசத்தில் உள்ள பொதுமக்களின் நிலைமைகள் குறித்து இந்தக் குழுவினர் ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை விடுத்த வேண்டுகோளை சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
யுத்த சூன்ய பிரதேச மக்களது நிலைமைகளை நேரில் பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரசல்ஸில் நடைபெற்ற சோமாலியாவிற்கு உதவி வழங்கும் நாடுகளினது மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை விஜயத்திற்கு இலங்கை அரசாங்கம் பூரண ஆதரவு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களை கவனிப்பதற்கு அரசினால் எவ்வித கட்டமைப்பும் நியமிக்கப்படவில்லை: மக்கள் விசனம்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே வரும் மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அரச அதிபரால் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.ஆனால் வந்துசேரும் மக்களுக்கு உதவுவதற்கு ஒரு விசேட செயலணியோ, நிர்வாக கட்டமைப்போ இதுவரை மாவட்ட செயலகத்ததால் நியமிக்கப்படவில்லை.கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வவுனியாவரும் மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக அரச நிர்வாகத்தால் செய்யப்படும் உதவிகள் மிகவும் மோசமடைந்துள்ளது.
மாவட்ட செயலகத்திலுள்ள வளங்கள்கூட இத்தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றதா என்றால் அதுவும் இல்லை. அவரவர் தமது தேவைக்காக எந்த முகாமில் தமது உறவினர் இருக்கிறார்களோ அவர்களைப் பார்வையிட சாரதி சம்மதித்தால் சரி. அந்தந்த பணியாளர்களுக்கான தேவைக்காக முகாங்களுக்கு வாகனம் சென்றுவிடுகின்றது.
அப்படியானால் ஒட்டுமொத்த மக்களின் தேவைகளை நிறைவுசெய்வது யார்? நேற்றுக்கூட மாவட்ட செயலகத்தில் செயலகத்திலுள்ள வெற்று சோடாப் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு நீர் நிரப்பபட்டு மாவட்ட தலமை அதிகாரியால் (Head Quarters) ஒரு பிக்கப் வாகனத்தில் ஓமந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது. திரும்பிவரும்போது வாகனத்தை நோக்கி சிறுவர்கள் தண்ணீர் தண்ணீர் என்று ஓடிச்சென்றுள்ளனர்.
ஒரு சாதாரண பணியாளர் செய்வதைபோல ஒரு மாவட்ட தலைமை அதிகாரியே போத்தல் தேடி நீர் நிரப்பி எத்தனை பேரின் குடிநீர் தேவையை நிறைவுசெய்ய முடியும். இதுதான் “மனிதாபிமான மீட்பு நடவடிக்கையா?. “யானைப்பசிக்கு சோளப்பொரியா” அண்ணளவாக ஒரு இலட்சம் மக்களுக்கு இதுவா திட்டம். ஐ.நா நிறுவனங்களும் ஓமந்தைக்கு செல்லமுடியாது. அரச நிர்வாகமே உடனடியாக உணவு, குடிநீர் தேவைகளை நிறைவு செய்யவேண்டும்.
மாவட்ட செயலகத்தின் உணவு விநியோகத்தை பார்த்தால் மாவட்ட கணக்காளர் ஒப்பந்தம் போடுபவராகவே உள்ளார். 50000 பார்சல்களுக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் 10000 பார்சல்களே ஒமந்தையை வந்தடைவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் இங்கே என்ன நடைபெறுகிறது? இவற்றை கண்காணிக்ககூட நிர்வாகத்தால் இயலாதா? அவலப்பட்ட மக்களின் உணவிலா மோசடி!
ஓமந்தைககு சென்றால் அங்கே காசுள்ளவர்கள் காசை நீட்டி தண்ணீர் தண்ணீர் என கைகூப்பி வணங்குகின்றனர். இந்த அவலத்தை யாரேனும் பார்க்கமுடியுமா? சென்றவர்களால் தண்ணீர்கூடி வாங்கி கொடுக்க முடியாதவாறு தடி, செருப்பு காட்டி காவலர்களால் துரத்தப்படுகின்றனர்.
இதனிடையே இம்மக்களின் அரச நிர்வாக தலைவர்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள்கூட இங்கேதான் இருக்கிறார்கள் அவர்களும் செயற்பட முடியாதவாறு அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இருந்தும் முல்லை மாவட்ட அரச அதிபரால் சொந்தப்பணத்தில் 2000 உணவு பார்சல்கள் தயாரிக்கப்பட்டு கொண்டு சென்று வழங்கப்பட்டுள்ளது. இதுபோலாவது மற்றவர்கள் முயற்சிக்கலாம்.
கொண்டுவரப்படும் மக்கள்கூட இறக்கப்படாமல் பலமணிநேரம் (4-8 மணித்தியாலயங்கள்) பஸ்களிலேயே அடைக்கப்பட்டிருப்பதால் அவர்களில் பலர் மயக்கமடைந்தும் சிறுவர்கள் சிலர் இறந்தும் உள்ளார்கள். இவையாவும் கற்பனையல்ல நிஜம் “ஊடகவியலாளர்களே! கிளிநொச்சிக்கு சென்ற உங்களுக்கு வவுனியா அவலம் புரியவில்லையா”?
நேற்று முந்தினம்கூட மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட மாநாடு இடம்பெற்றது ஆனால் எந்த வேகமும் இல்லை. செயலகத்திற்குவரும் உணவு, குளிர்பானங்களை பெற்று மக்களுக்கு வழங்குவதற்குரிய கட்டமைப்பே உருவாக்கப்படவில்லை. வரும் பொருட்கள் வாகனங்களில் மாற்றப்படும். பின்னர் கணக்காளர் இல்லை என காத்திருப்பு. பின்னர் மாலையளவில் செல்லும் இதுதான் தற்போதைய மாவட்ட நிர்வாக கட்டமைப்பு.
ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போதுகூட இவ்வளவு கஸ்டங்களை மக்கள் அனுபவிக்கவில்லை. அங்கே நல்ல நிர்வாக அமைப்பிருந்தது. அந்த கட்டமைப்பை நிர்வகித்த அரச அதிகாரிகள்கூட இங்கேயும் வந்திருக்கிறார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகத்தால் அவர்களை சரிவர பயன்படுத்த முடியவில்லை.
ஓமந்தையில் இப்படியென்றால் தற்காலிக முகாங்களில் நிலமையும் அதேகதிதான். ஒருவர் குளிப்பதற்கு 10 லீற்றர் நீர்தான் அதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இவற்றால் வெப்பத்தால் உருவாகும் அம்மைநோய் பெருமளவானோருக்கு தொற்றியுள்ளது. இவற்றை அறிய வேண்டுமானால் பூவரசங்குளம் வைத்தியசாலை தகவல்களே சொல்லும்.ஐ.நா நிறுவனங்கள் பலமுறை ஓடித்திரிவதிலும், கூட்டங்களை நடாத்துவதிலும் காலங்கடத்துகின்றன. சில நிறுவனங்கள் முகாங்களுக்கு உணவைவிட நிறையுணவிற்காக மேலதிக போசாக்குணவை வழங்கிவருவது பாடாட்டுக்குரியது. இருந்தாலும் உணவே இல்லாதிருப்போரை முதலில் கவனியுங்கள் பின்னர் நிறையுணவு வழங்கலாம்.
வந்தவர்களை கேட்டால் அங்கே உயிருக்கு பயம். அதுதான் வந்தோம். ஆனால் இங்கே உயிரைவிட எதுவுமேயில்லை என கவலையோடு சொல்கிறார்கள். ஒன்றுமட்டும் உண்மை அங்கேயுள்ள மனிதாபிமான பணயக்கைதிகைளை மீட்டு இங்கேயுள்ள முட்கம்பி சிறைச்சசாலை கைதிகளாக்கும் அரசின் திட்டம் ஓரளவு வெற்றியளித்துள்

மக்களுக்கு மண் சாப்பிட நேரிட்டாலும் போர் நிறுத்தப்பட மாட்டாது – பிரதமர்
மக்கள் மண் சாப்பிட நேரிட்டாலும் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தப்பட மாட்டாதென பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.சர்வதேச சமூகத்தின் ஒட்டு மொத்த உதவிகளும் நிறுத்தப்பட்டால் கூட போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் முன்னெடுக்கப்பட்டுள்ள மனிதாபிமான மீட்புப் பணிகள் எந்த காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஹிலாரி கிளின்ரன் உள்ளிட்ட சர்வதேச முக்கியஸ்தர்கள் பிரபாகரனை மீட்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நல்ல மனிதர்கள் யார் ? பாவிகள் யார் என்பதனை உலகம் விரைவில் உணர்ந்து கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடம்பெயர் மக்களை பாதுகாப்பது குறித்து சர்வதேச சமூகம் அக்கறை காட்டவில்லை எனவும் பிரபாகரனை பாதுகாப்பதற்கு அதிகளவு முனைப்பு காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்து மோதல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகள் குறித்து இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகளை கட்டுப்படுத்த கடற்படை தவறியிருப்பதாக இராணுவத் தலைமைக்கு இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் ஏலவே முறையிட்டிருந்தனர். இதனையடுத்து கடற்படையினருக்கு என அதிசக்தி வாய்ந்த கதுவீகள் பொருத்தப்பட்ட படகுகளும் அதிவேக படகுகளும் கொள்வனவு செய்யப்பட்டு கடலில் கடற்படையின் பலம் அதிகரிக்கப்பட்டிருந்தது. அத்துடன், விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நான்கு வலயங்களைக்கொண்ட கடல்வழி பாதுகாப்பு நடைமுறையும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் தற்போது இராணுவ உயர்மட்டத்திற்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இருப்பிடம் குறித்தே இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் தற்போதைய கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கடல்வழி நகர்வை கட்டுப்படுத்த முடியாமல் அவரை கடற்படையினர் கோட்டைவிட்டிருப்பதாக இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விசனம் எழுப்பப்பட்டுள்ள போதும் - அந்த குற்றச்சாட்டை கடற்படை அடியோடு மறுத்துள்ளது. குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடல்வழி நகர்வை மேற்கொண்டிருக்கலாம் என களத்தில் உள்ள இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், கடல்வழியாக அவர் எந்தவொரு நகர்வையும் செய்யமுடியாது என்றும் தமது பாதுகாப்பு அத்தகையதே என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கொழும்பில் நேற்றைய நாள் ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில் -கடற்படையினர் அதிசக்தி வாய்ந்த தொழிநுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளையே முல்லைத்தீவில் மேற்கொண்டுள்ளனர். கடல்வழியாக புலிகள் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாது. குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் கடல் வழியாக எந்த நகர்வையும் மேற்கொள்ள கடற்படை இடமளிக்காது என்று தெரிவித்திருந்தார். கடற்படையினரின் இந்த கருத்து இராணுவத் தலைமைக்கும் கடும் விசனத்தை ஏற்படுத்தி அது வெளிப்படையான கருத்து மோதல்களாக வெளிப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு இன்று வெள்ளிக்கிழமை சிங்கள ஊடகவியலாளர்களை இராணுவ உலங்குவானூர்தியில் அழைத்துச் சென்ற இராணுவத்தினர், அங்கு ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தினர். அச்சந்திப்பில் 58 ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் சவீந்திர டி சில்வா ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்படையினர் மீதான தனது விசனத்தை கொட்டித் தீர்த்தார். நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பிரபாகரன் நகர்வை மேற்கொண்டிருக்கலாம் என நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ள அவர், கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை, புலிகிளின் தலைவர் பொட்டு அம்மான், பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி ஆகியோர் தொடர்ந்தும் முல்லைத்தீவிலேயே இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கடல்நகர்வு குறித்த இத்தகைய முரண்பாடான தகவல்களாலும் கருத்து மோதல்களாலும் இராணுவத் தலைமைக்கும் கடற்படைக்கும் இடையிலான முறுகல் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thursday, April 23, 2009
சிறிலங்காவின் கோரிக்கையை ஐ.நா. வழிமொழிந்தது - விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு ஐ.நா கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நியூயோர்க்கில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பிற்பாடு பாதுகாப்பு சபையின் தலைவர் குளூட் கெலர் (Claude Heller) இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் எஞ்சியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் உதவவேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைகளின் ஊடாக அரசியல் தீர்வை ஆரம்பித்து இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பகுதியில் மக்களை விடுவிக்காது வைத்திருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இதேநேரம் சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக மனிதாபிமான சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் சென்றடைவதை அனுமதிக்க வேண்டும் எனவும் பாதுகாப்புச் சபையின் தலைவர் குளூட் கெலர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையமாட்டார்கள், அப்படி ஒருசூழ்நிலை வந்துவிடவில்லை, விடுதலைப்புலிகள் தற்போதும் முழுநம்பிக்கையுடனும் தைரியத்துடனுமே போராடிவருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் கடந்த செவ்வாயன்று தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை பிரச்சனை: பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா!

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாததை கண்டித்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் திரைப்பட வர்த்தகசபை (சென்னை பிலிம் சேம்பர்) வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம்' நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது. இப்போராட்டத்தில் திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், மாதர் சங்கத்தினர், இலக்கியவாதிகள், ஓவியர்கள், கலைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தின் இறுதியில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோர் பேசினர். கூட்ட முடிவில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா பேசினார். அப்போது, அவர் கூறுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாத மத்திய அரசு, தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவதாக அறிவித்தார். இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தாம் மனம் நொந்து இருக்கும் இந்த சூழ்நிலையில், போர் நிறுத்தம் செய்யாத மத்திய அரசு வழங்கிய இந்த பத்மஸ்ரீ விருது, தனது மிகப்பெரிய உறுத்தலாக இருப்பதாகவும், அதனால் அந்த விருதை திருப்பி அனுப்புவதாகவும் குறிப்பிட்டார் பாரதிராஜா.
செஞ்சிலுவைச் சங்க கப்பலைத் தடுத்த கடற்படை: 10 நோயாளர்கள் கரையில் உயிரிழப்பு

முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து கடும் நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்காக இன்று வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலை சிறிலங்கா கடற்படைப் படகுகள் சுற்றிவளைத்து கரைக்குச் செல்லவிடாது தடுத்ததால் நோயாளர்களை ஏற்றும் பணி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன், இந்த இழுபறியில் நோயாளர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 6:00 மணிக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் ‘கிறீன் ஓசன்’ கப்பல் முள்ளிவாய்க்கால் நோக்கி நோயாளரை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே கடற்படையினரின் தலையீட்டையடுத்து பிரச்சினைகள் தொடங்கியதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா கடற்படையின் டோறா மற்றும் கூகர் படகுகள் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலை நோக்கியும், நோயாளர்களை ஏற்றிவருவதற்குத் தயாராகவிருந்த மீன்பிடிப்படகுகளை நோக்கியும் பீரங்கித்தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த திடீர்த்தாக்குதலால் செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் கப்பல் அச்சத்தால் ஆழ்கடலுக்கு சென்றது.
அப்போது செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் கப்பலை நெருங்கிய சிறிலங்கா கடற்படையினர் தாம் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகவும், கப்பலை கரைக்குக் கொண்டுசெல்ல வேண்டாம் என்றும் எச்சரித்தனர். மீறிப்போனால் கப்பலுடன் தாமும் வருவோம் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து நிலைமைகளை சுமூகமாக்கும் நோக்கத்துடன் செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் உயர்மட்டத்தினருடன் கதைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத அதேவேளையில், கப்பலில் பயணிப்பதற்காக நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கரையில் காத்து நின்றனர். இவர்களில் சிலர் செஞ்சிலுவைச் சங்க கப்பலில் ஏற்றப்படுவதற்காக மீன்பிடிப் படகுகளிலும் ஏற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் முறுகல் நிலை தொடர்ந்து கொண்டிருந்தமையால் பிற்பகல் 3:00 மணிக்கு கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை நோயாளரை ஏற்றிச் செல்வதற்காக வந்த கப்பலை கரைக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவுக்கு வரும்படியும் கடற்படைக்கு அதில் இருந்து 3 கிலோமீற்றருக்கு தள்ளி நிற்கவேண்டும் எனவும் தகவல் தெரிவித்தார்.
அதன்பின் செஞ்சிலுவைக் சங்க கப்பல் கரைக்கு வந்து 526 நோயாளர்களை ஏற்றியவாறு மாலை 6:00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டது.
இதேவேளையில் காலையிலேயே நோயாளர்கள் கப்பலில் கொண்டு செல்வதற்காக கரைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர். மீன்பிடிப் படகுகளிலும் சிலர் ஏற்றப்பட்டனர். தொடர்ந்து கரையோர வெயிலில் கிடத்தப்பட்டிருந்த அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது ஆபத்து நிலையில் 1,200 பேர் மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈழத்தமிழர்களை காக்கக் கோரி அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி மரணம்: ஜெயலலிதா மெளன அஞ்சலி
ஈழத்தமிழர்களை காக்கக் கோரி பண்ருட்டியை சேர்ந்த அதிமுக தொண்டரான சுப்பிரமணி (வயது 43). இன்று திடீரென கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள், மனைவி உள்ளனர்.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்த இவர், இன்று திடீரென கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சுப்பிரமணியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணிக்கு உயிரிழந்தார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதை பற்றி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈழத்தமிழருக்காக தீக்குளித்த சுப்பிரமணிக்கு ஜெ. மெளன அஞ்சலி
ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்த பண்ருட்டி சுப்பிரமணி (வயது 43) சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். அதிமுகவை சேர்ந்த இவர் தீக்குளித்தது பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை அதிமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி வேட்பாளர் மோகனை ஆதரித்து மதுரையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஈழத்தமிழர்களுக்காக அதிமுகவை சேர்ந்த மணி தீக்குளித்துள்ளார் என்று எனக்கு செய்தி வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அதிமுகவினரிடம் கூறினேன்.
ஆனால் மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக சிவகாசியில் இருந்து மதுரை வந்துகொண்டிருக்கும்போது எனக்கு செய்தி வந்தது. இலங்கை தமிழர்களுக்காக உயிர் நீத்த மணியின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்த மணிக்காக பொதுக்கூட்டத்தில் கூடியிருக்கும் அனைவரும் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார். அதன்படி அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்

இலங்கை அகதி முகாம்கள் சர்வதேச தரத்திற்கு அமையப் பேணப்பட வேண்டும் ‐ அவுஸ்திரேலியா:

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தஞ்சமடைந்துள்ள அப்பாவிச் சிவிலியன்கள் தங்கியிருக்கும் முகாம்கள் சர்வதேச தரத்திற்கு அமைய பேணப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அகதி முகாம்களை கண்காணிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை கௌவரப்படுத்தும் வகையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நீண்டகால சுபீட்சத்தை கருத்திற் கொண்டு அரசாங்கம் சரியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெற்று வரும் பிரதேசத்தில் தங்கியுள்ள சிவிலியன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துரதிஸ்டவசமாக, பெரும் எண்ணிக்கையிலான அப்பாவிச் சிவிலியன்களது உயிர் யுத்தத்தினால் காவு கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மோதல் தவிர்ப்பு வலயம் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் எறிகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்பாவிச் சிவிலியன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் யுத்த நிறுத்தம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு நியாயம் வழங்கக் கூடிய வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது மிகவும் இன்றியமையாத தேவையாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

போர் பகுதியில் இன்னும் 2 லட்சம் தமிழர்கள் உள்ளனர்; விடுதலைப்புலிகள் தகவல்
இலங்கை போர் பகுதியில் இருந்து கடந்த 4 நாட்களில் 1 லட்சம் தமிழர்கள் வெளியேறி இருப்பதாகவும், வேறு அப்பாவி தமிழர்கள் யாரும் இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர். விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு பிராந்திய அதிகாரி இளம்பரிதி இது பற்றி கூறியதாவது:- போர் பகுதியில் தங்கி இருக்கும் தமிழர்களை சிங்கள ராணுவம் பிடித்து செல்ல முயற்சித்ததும் அவர்களில் ஏராளமான தமிழர்கள் தப்பி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வளைஞர் மடம், முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் வந்துள்ளனர். எங்கள் பகுதிக்குள் இன்னும் 2 லட்சம் தமிழர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிலையில் போர் பகுதியில் இருக்கும் மக்களுக்கு போதிய உணவு இல்லை. நிலைமை மோசமாக இருக்கிறது என்று அங்குள்ள மருத்துவ குழு கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை போர் பகுதியில், சர்வதேச பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசாங்கம் சிங்களமயமாக்கல் திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது ‐ ஹக்கீம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் சிங்கள மயமாக்கல் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார். ஏற்கனவே புல்மோடை போன்ற பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தவும், சில வீதிகளுக்கு சிங்களப் பெயர்களை சூட்டவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உள்ளுராட்சி நிர்வாகங்களினது அனுமதியின்றி இந்த சிங்கள மயமாக்கல் சூழ்ச்சித் திட்டம் அரங்கேறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் சட்டமூலம் தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி பிரபாகரனுக்கு 24 மணிநேர காலக்கெடு விதித்ததனைப் போன்று நாமும் ஜனாதிபதிக்கு மூன்று வார காலக்கெடு விதிக்க உள்ளதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று வார காலத்திற்குள் உள்ளுராட்சி தேர்தல் சட்ட மூலம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்ப வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தமிழர்களின் நிலை; நேரில் கண்டு வந்த ஸ்ரீரவிசங்கர் பேட்டி
பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. இவ்வாறு வவுனியாவில் தங்க வைத்துள்ள இடம்பெயர் தமிழ் மக்களை பார்வையிட்ட வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை
பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி, வீடு வாசல்களை இழந்து, ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 8 இலட்சம் தமிழர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன். நான் நேற்று முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் செட்டிகுளம், அருணாசலா உள்பட 8 முகாம்களை சென்று பார்வையிட்டேன். மனதை கல்லாக்கிக்கொண்டுதான் அங்கு செல்ல முடியும். மனிதனாக போகமுடியாது என்றுதான் சொல்லவேண்டும். இந்த முகாம்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். என்ஜினீயர்கள், டாக்டர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர் அங்கு தங்கி உள்ளனர். பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பேசியபோது, இப்படியே விட்டுவிட்டால் அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களுக்கு வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினோம். முகாம்களில் தங்கி உள்ளவர்கள் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இராணுவத்தால் எந்த தொல்லையும் இல்லை என்று சொல்கிறார்கள்.
இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம். தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை தீராததற்கு இங்கும் சரி, அங்கும் சரி தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம் ஆகும். இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது. பந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது. உணவு, உடை என்று நிவாரண உதவிகளைப் பெறும் நிலையில் முகாம்களில் தங்கி இருந்தாலும், தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள். இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நான் பேசினேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த வீடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத அளவுக்கு வீடு, வாசல்கள் தரை மட்டமாகி உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார். தீவிரவாதத்தை வேரோடு அழித்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று ராஜபக்சே தெரிவித்தார். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து இருக்கலாம். நானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். ஆனாலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாதபடி நிலையில் உள்ளனர். தங்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

Tuesday, April 21, 2009
படையினரிடம் ஓருபோதும் சரணடையப் போவதில்லை – எஸ். புலித்தேவன் :
அரசாங்கப் படையினரிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார். இறுதி வரையில் தமது போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என புலித்தேவன் தெரிவித்துள்ளார். ரொய்டர்ஸ் உலக செய்தி சேவைக்கு அளித்த தொலைபேசி செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள்ளேயே வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கப் படையினரே தமிழ்ச் சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னி பெரு நிலப்பரப்பில் பாரிய இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும், மிகக் குறுகிய காலத்திற்குள் சர்வதேச சமூகம் தலையீடு செய்யப்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய தினம் அரசாங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 1000 சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன், 2000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பூரண ஆதரவளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அரச படையினர் சிவிலயின்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே கட்டுப்பாடற்ற பிரதேசத்திலிருந்து தப்பித்து வரும் சிவிலியன்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தின் கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில வலைஞர் மடத்தில் வைத்தியர் உட்பட மருத்துவப் பணியாளர்கள் பலி
வலைஞர் மடத்தில் இயங்கி வந்த தற்காலிக வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்தியர் சிவமனோகரன் உட்பட மருத்துவப் பணியாளர்கள், மற்றும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பலரும் இலங்கை இராணுவத்தின் கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
வைத்தியர் சிவமனோகரன் அப்பகுதியிலிருந்து வெளியேற மறுத்து வந்தவர். இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல் காரணமாகப் படுகாயமடைவோரைக் காப்பாற்

Subscribe to:
Posts (Atom)