Saturday, April 25, 2009

சிவிலியன்கள் படுகொலைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வன்மையாகக் கண்டனம் :


வன்னியில் அப்பாவிச் சிவிலியன்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை வன்யைமாகக் கண்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.மோதல்களில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் சிவிலியன் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இன்றியமையாததென ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சகல சந்தர்ப்பங்களிலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களது நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது. அப்பாவிச் சிவிலியன்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்தக் கூடாத எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment