Tuesday, April 28, 2009

சுவீடன் அமைச்சருக்கு வீஸா அனுமதி மறுத்ததன் மூலம் இலங்கை பாரிய விளைவுகளை எதிர்நோக்கும் செக் குடியரசு:

சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு வீஸா அனுமதி மறுத்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறைத் தலைமைத்துவத்தை வகிக்கும் செக் குடியரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்று வரும் யுத்தம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிச் சிவிலியன்களது நிலைமையை நேரில் கண்டறியும் நோக்கில் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
எனினும், இறுதி நேரத்தில் சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கைக்குச் செல்வதற்கான வீஸா அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவீடன் அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை கண்டனத்திற்குரிய குற்றமாகும் என செக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் கரல் சிச்வான்ஸர்பெர்க் Karel Schwarzenberg தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கை பாரிய பின் விளைவுகளை எதிர்நோக்க நேரிடலம் என அவர் தெரிவித்துள்ளார்.
முறுகல்களுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதில் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் விற்பன்னராக திகழ்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment