
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை மூத்த அதிகாரிகளுடன் அதிபர் பாரக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளார். இலங்கைப் பிரச்சினையில் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்தியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் காரணமாக, பல்வேறு வல்லரசு நாடுகளும் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபப் பார்வையைத் திருப்பியுள்ளன.இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு முக்கிய நடவடிக்கையாக, அரசின் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.மிக முக்கியப் பிரச்சினைகளில் மட்டுமே இவ்வாறு பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து அதிபர் ஆலோசனை மேற்கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆலோசனையில் அமெரிக்க வெளியுறவுத்துறை, பென்டகன், தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ்எய்ட், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக் காட்டுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது.அதிபர் ஒபாமாவுக்கு இலங்கை நிலவரம் குறித்து தினசரி தெரிவிக்கப்பட்டு வருகிறதாம். இலங்கை நிலவரத்தை அதிபர் ஒபாமா கூர்ந்து கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன
No comments:
Post a Comment